6–வது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனை இந்தியா கண்டனம்
6-வது முறையாக வடகொரியாவின் அணுகுண்டு சோதனை நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
உலகளாவிய எதிர்ப்பு, ஐ.நா. பொருளாதார தடைகள், சர்வதேச உடன்பாடுகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா அதிரடியாக 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில் வடகொரியாவின் இந்த செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
கொரிய தீபகற்பத்தின் அமைதியை பாதிக்கும் செயல்களை வடகொரியா விலக்க வேண்டும். 6-வது முறையாக வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் இந்தியா கவலை கொண்டுள்ளது. ஹிரோஷிமா,நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டை விட பலமடங்கு சக்தி வாய்ந்தது வடகொரியாவின் சோதனை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த செயலுக்கு தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.