சீனா, பாகிஸ்தானுடன் பதற்றம் இந்தியா, போருக்கு தயாராக வேண்டும்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:–;

Update:2017-09-07 05:15 IST

புதுடெல்லி

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:–

டோக்லாம் பிரச்சினை, 73 நாட்களாக நீடித்தது. சீனா, முறுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சினை, படிப்படியாக பெரிய மோதலுக்கு வழிவகுத்து விடும். அதுபோல், பாகிஸ்தான் ராணுவமும், அரசியல்வாதிகளும் நமது நாட்டை எதிரியாக பார்க்கின்றனர். பாகிஸ்தானுடன் இணக்கத்துக்கு வாய்ப்பே இல்லாதது போன்று தோன்றுகிறது.

இந்த இரு நாடுகளுடனான மோதல், ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிந்துவிடக்கூடும் அல்லது முழு அளவிலான போராக உருவெடுக்கக்கூடும்.

எனவே, இந்தியா இருமுனை போருக்கு தயாராக வேண்டும். முப்படைகளில் ராணுவத்தின் முன்னுரிமை நீடிக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்