வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை:- இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் வேதனை

இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறினேன் என்று ஷிராஸ் அலி கான் கூறியுள்ளார்.;

Update:2025-12-23 03:23 IST

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்த மாணவர் புரட்சியால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.இதனால் இடைக்கால அரசின் கீழ் இருக்கும் வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த மாணவர் புரட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு கடந்த 12-ந்தேதி டாக்கா அருகே பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் உஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹாதி,சிங்கப்பூரில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாட்டில் மீண்டும் போராட்டமும் வன்முறையும் நிகழ்ந்தன. இந்த சூழலி, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் சுடப்பட்டதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை; இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறினேன்,” என, சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள், எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். என் மூதாதையர்கள் அங்கிருப்பதால், என் தாயாரும், இசைக்குழுவினர் சிலரும் வங்கதேசத்தில் உள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவர். இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம். நிலைமை சீராகும் வரை நானும் வங்கதேசம் செல்லமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்