ஜம்மு காஷ்மீர்: எம்.எல்.ஏ வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ வீடு மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-10-20 14:02 GMT
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முஸ்டாக் அகமது எம்.எல்.ஏ என்பவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகள் தாக்குதலின் போது குடும்ப உறுப்பினர்கள்  யாரும் வீட்டில்  இல்லை.

எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்