முத்திரை தாள் மோசடி தெல்கி பெங்களூருவில் மரணம்

முத்திரை தாள் மோசடி வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த தெல்கி சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

Update: 2017-10-26 12:18 GMT

பெங்களூர்

போலி முத்திரை தாள்களை தயாரித்து பல்லாயிரக்கணக்கான கோடி மோசடி செய்த வழக்கில், அப்துல் கரீம் தெல்கி (56) கடந்த 2001ம் ஆண்டு அஜ்மீர் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெல்கிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்தது.

தெல்கி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . அவருக்கு 20 வருடங்களுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருந்தன. மேலும் தெல்கிக்கு எய்ட்ஸ் இருந்ததும் தெரியவந்தது.

 உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர், விக்டோரியா அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை, தெல்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியோடுதான் தெல்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். தெல்கி ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தெல்கி இன்று உயிரிழந்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தெல்கி, சசிகலா  போன்ற  விஐபிகள் பணத்தை கொடுத்து சிறைக்குள்  சலுகைகள் அனுபவிக்கிறார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சமீபத்தில்  புகார் கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்