நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து 31 பேர் பலி

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 31 பேர் பலியாகினர்.

Update: 2017-10-28 12:14 GMT
காத்மண்டு,

நேபாளத்தில் ராஜ்பிராஜ் என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நோக்கி 52 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் வளைவில் பஸ் திரும்ப முயன்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி என்னும் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்து சென்று கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நேபாள நாட்டு ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 26 உடல்கள் மீட்கப்பட்டது. 16 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக மீட்பு குழுவில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் பெரும்பாலும் சப்திரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் அவரது பெயர் மமதா தேவி தாகூர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்