பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை ஏற்கமுடியாது இந்தியா காட்டம்

பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிஉள்ளது.

Update: 2017-10-30 10:42 GMT

புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது என இந்தியா காட்டமாக கூறிவிட்டது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், இந்தியா பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது, இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையை கொடுக்கும், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடியை இந்தியா கொடுக்கும் என பாகிஸ்தான் தரப்பிடம் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் (டிஜிஎம்ஒ) லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் கூறிஉள்ளார் என தகவல்கள் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்