பத்மாவதி படம்: நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பாரதீய ஜனதா பிரமுகர் பதவி ராஜினாமா

பத்மாவதி பட விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மற்றும் இயக்குனர் சஞ்சய் பன்சாலி ஆகியோர் தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பாரதீய ஜனதா பிரமுகர் பதவி ராஜினாமா செய்தார்.

Update: 2017-11-29 08:41 GMT
ஜெயப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். 

பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால்  அமு கூறி இருந்தார்.  

 தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால்  அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொடரபாளர்  பதவியை ராஜினாமா செய்து உள்ளார். 

இது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் ரஜபுத்தரர்களை அவமானபடுத்திதும் பத்மாவதி திரைப்படத்தை  மாநிலத்தில் தடை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. அவரது செயல்பாடு எனது மனதை புண்பட வைத்து உள்ளது. நான் அவரை ஒரு  பி.ஜே.பி முதல்வராக பார்க்கவில்லை.  அவர் கட்சி தொழிலாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை மதிக்க வில்லை. நான் கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

எனது  இப்போதைய  கனவு (முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர்) லால் சவுக்கில் பரூக் அப்துல்லாவை கன்னத்தில் அறைய வேண்டும் , அவரை அங்கு சந்திக்க நான் சவால் விடுகிறேன்"என கூறினார்.

மேலும் செய்திகள்