குடிக்க தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

கர்நாடகாவில் சுற்றுலா சென்ற இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.;

Update:2017-12-13 21:08 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் துமகுரு மாவட்டத்தில் அரசு பள்ளி கூடம் ஒன்று உள்ளது.  இங்குள்ள மாணவர்கள் கடந்த 10ந்தேதி தட்சிண கன்னடா பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா முடிந்து திரும்பிய பொழுது அவர்களில் களைப்புடன் இருந்த சில மாணவர்கள் குடிக்க தண்ணீர் தரும்படி ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.  ஆனால், தண்ணீருக்கு பதிலாக மது போதையில் இருந்த ஆசிரியர்கள் மதுபானம் இருந்த பாட்டில்களை கொடுத்துள்ளனர்.  இதனை அறியாமல் வாங்கி குடித்த மாணவர்களில் சிலர் வாந்தி எடுத்துள்ளனர்.

அந்த மாணவர்களின் பெற்றோர் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து பொம்மல தேவி புரா பகுதியில் அமைந்த அந்த பள்ளி கூடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  அதனை அடுத்து தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்