மேற்கு வங்காளம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் படுகாயம்

வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2026-01-10 14:29 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்து பட்டாசு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்