உத்தரகாண்டில் கங்கோத்ரி ஆற்று பாலம் இடிந்து விழுந்தது

உத்தரகாண்டில் கங்கோத்ரி ஆற்று பாலத்தில் கனரக லாரி சென்று கொண்டிருக்கும் போது திடீரென பாலம் உடைந்து விழுந்தது.

Update: 2017-12-14 11:22 GMT
உத்தரகாசி,

உத்தரகாண்டில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் கங்கோத்ரி பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து இந்த இடத்தில் போக்குவரத்து வசதிக்காக இரும்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று காலையில் கனரக லாரி ஒன்று அதிக அளவில் பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரியின் பளுவை தாங்காமல் பாலம் திடீரென சரசரவென்று உடைந்து விழுந்தது.  இதனால் சாலை மூடப்பட்டது. சாலை மூடப்பட்டதால் கங்கோத்ரி, மனேரி,ஹர்சில் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்