சிறுத்தையுடன் சண்டையிட்ட 60 வயது முதியவர்

உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையுடன் 60 வயது முதியவர் ஒருவர் தைரியமாக சண்டையிட்டுள்ளார்.;

Update:2017-12-15 16:04 IST

உத்தரபிரதேசம் பாரைச்  மாவட்டத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமத்திற்குள் காட்டு சிறுத்தை ஒன்று திடீரென்று புகுந்தது. மூன்று பேரை தாக்கிய இந்த சிறுத்தையை 60 வயது முதியவரை தாக்க முயன்று உள்ளார். அவர் அந்த சிறுத்தைப் புலியுடன் எதிர்த்து சண்டை போட்டு உள்ளார். மேலும் ஒரு பெரிய கம்பினை எடுத்து சிறுத்தையை விரட்டியடித்துள்ளார்.

சிறுத்தை இவரை கீழே தள்ளியபோதும், தனது கைகளால் சிறுத்தையை அடக்கியுள்ளார், இறுதியில் சிறுத்தை அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. இந்த சம்பவத்தை ஹைரி என்ற பக்கத்து வீட்டு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து வனத்துறை அதிகாரி கிராமத்திற்கு சென்று நடந்தவை குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்