வேளாண் அமைச்சக அதிகாரி வீட்டில் ரூ.2.15 கோடி சிக்கியது ரூ.30 லட்சம் நகைகளும்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் மத்திய வேளாண் துறையின் மண்டல உத்தரவாத அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தாவர பாதுகாப்பு அதிகாரியாக ஆர்.கே.சசிகர் பணியாற்றி வருகிறார்.

Update: 2018-01-15 22:30 GMT
புதுடெல்லி,

வேளாண் அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்ட இவர், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தாவரம் சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில் கோடிக்கணக்கான நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஆர்.கே.சசிகருக்கு சொந்தமான 24 இடங்களில் அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் ரூ.2.15 கோடி மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் சிக்கின. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் வேளாண் அதிகாரி ஆர்.கே.சசிகர் மீதான வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்