மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ மரியாதை

மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ மரியாதை செலுத்தினர். #BenjaminNetanyahu #mumbai

Update: 2018-01-18 11:12 GMT
மும்பை,

மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ அஞ்சலி செலுத்தினார். தாஜ்மகால் பாலேஸ் ஹோட்டலில், அமைந்துள்ள மும்பை தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து  இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி செலுத்தினர். 

மகாரஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும்  இணைந்து அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் உள்ள வருகை புத்தகத்திலும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பு எழுதினார். இஸ்ரேல் பிரதமர்  வருகையையொட்டி அப்பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இதைத்தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர், அருகாமையில் உள்ள  நரிமன் இல்லம் சென்றார். நரிமன் இல்லத்தில், மும்பை தாக்குதலில் தனது பெற்றோர்களை பறிகொடுத்த இஸ்ரேல் சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க்கையும் சந்தித்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலின் போது, மோஷேவின் பெற்றோர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். 

மேலும் செய்திகள்