அரியானாவில் ஜம்மு-காஷ்மீர் கல்லூரி மாணவர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல்

அரியானாவில் ஜம்மு காஷ்மீர் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். #JammuandKashmir #MehboobaMufti

Update: 2018-02-03 08:28 GMT
சண்டிகர்,

அரியானாவில் அரியனா பல்கலைகழகத்தில் அபுதாப் அகமது, அஜ்மத் ஆகிய காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 2 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று மர்மநபர்கள் திடீரென ஜம்மு காஷ்மீர் மாநில கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 2 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். அப்போது  உள்ளூரை சேர்ந்த கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்பொது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை அடையாளம் கண்டுள்ளோம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் அஜ்மத் கூறுகையில்,

மகேந்திரகார்க் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைக்காக சென்றோம்.  தொழுகை முடித்து வெளியே வரும் போது 10 முதல் 25 பேர் வரை கொண்ட கும்பல் எங்களை கடுமையாக தாக்கியது. அவர்கள் ஏன் எங்களை தாக்கினார்கள் என்ற காரணம் தெரியவில்லை என்று கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா முதல்-மந்திரியிடம் மெகாபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி  மெகாபூபா முப்தி  கூறியதாவது: 

இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேந்திரகார்க் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இது தொடர்பாக சம்பந்த பட்டநபர்கள் மீது  மாநில அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்