தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் ஆகிறது : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

பிரசவ விடுப்பு பணிநாளாக கருதப்படும் மற்றும் தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் ஆக்கப்படும் என மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ளது.

Update: 2018-03-16 00:30 GMT
புதுடெல்லி,

‘பணிக்கொடை சட்டம் 1972’-ன்படி தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு தற்போது ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முறைசார் துறைகளில் 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் பணியாற்றி விட்டு விலகினாலோ அல்லது பணி ஓய்வின் போதோ ரூ.10 லட்சம் வரை வரியில்லா பணிக்கொடை பெற முடியும்.

இந்த உச்சவரம்பை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.20 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. எனவே இதற்காக மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் தாக்கலான அந்த மசோதா குரல் ஓட்டு மூலம் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா இனி மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அங்கும் இந்த மசோதா நிறைவேறி சட்டமானால், முறைசார் தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு வரியில்லாமல் ரூ.20 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதைப்போல பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பையும், பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குகிறது.

மேலும் செய்திகள்