தெஹ்ரீக் இ ஹுரியத் அமைப்பின் தலைவராக முகமது அஷ்ரப் செராய் இன்று தேர்வு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தெஹ்ரீக் இ ஹுரியத் அமைப்பின் தலைவராக முகமது அஷ்ரப் செராய் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #MohammadAshrafSehrai

Update: 2018-03-19 10:59 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டு கட்சியில் இருந்து கடந்த 2003ம் ஆண்டு பிரிந்து சென்ற சையது அலி ஷா கிலானி (வயது 88) தெஹ்ரீக் இ ஹுரியத் என்ற அமைப்பினை தொடங்கினார்.  அதன் தலைவராக கடந்த 15 வருடங்களாக அவர் பதவி வகித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கிலானி, தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்து இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.  இதனை தொடர்ந்து அந்த அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் செராய் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

எனினும், ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவராகவும் செராய் தேர்வாவார் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்