பனாமா நாட்டு இந்திய தூதர் ரவி தபருக்கு கூடுதல் பொறுப்பு

பனாமா நாட்டு இந்திய தூதர் ரவி தபருக்கு நிகாராகுவா நாட்டின் தூதர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. #RaviThapar;

Update:2018-04-21 16:59 IST

புதுடெல்லி,

பனாமா நாட்டின் இந்திய தூதராக இருப்பவர் ரவி தபர்.  கடந்த 1983ம் ஆண்டு இந்திய வெளியுறவு பணி அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில், கடந்த மாதத்தில் பனாமா நாட்டு இந்திய தூதராக தபர் நியமனம் செய்யப்பட்டார்.  அவருக்கு நிகாராகுவா நாட்டின் இந்திய தூதராக பதவி வகிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்