டெல்லி பொது பணி துறையில் ஊழல்; முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உறவினர் கைது

டெல்லி பொது பணி துறையில் நடந்த ஊழல் வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். #PWDScam

Update: 2018-05-10 06:23 GMT

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கில் கழிவுநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்துவதில் நிதி முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டது.  நிறைவேற்றப்படாத பணிகளுக்காக பொது பணி துறைக்கு அனுப்பப்பட்ட பில்கள் போலியாக தயாரிக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து 3 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.  இதில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினரான சுரேந்தர் பன்சாலுக்கு சொந்தமுடைய நிறுவனம் ஒன்றிற்கும் தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

ரேனு கன்ஸ்டிரக்சன்ஸ் (பன்சால், கமல் சிங் மற்றும் பவன் குமார் ஆகியோருக்கு சொந்தமுடையது) என்ற நிறுவனம் அதில் ஒன்றாகும்.

இந்த நிலையில் பன்சாலின் மகன் வினய் பன்சாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்