லாலு பிரசாத்துக்கு 6 வார இடைக்கால ஜாமீன்: ஜார்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவு

லாலு பிரசாத்துக்கு 6 வார இடைக்கால ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-11 22:45 GMT
ராஞ்சி, 

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவர் தனது மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவின் திருமணத்தையொட்டி 3 நாள் பரோலில் பாட்னா சென்று உள்ளார்.

முன்னதாக லாலு பிரசாத் தனது உடல் நிலையை சுட்டிக்காட்டி மருத்துவ அடிப்படையில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி அப்ரேஸ் குமார் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி விசாரித்து லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்