கர்நாடகாவில் பிரதமர் மோடி குதிரை பேரத்தினை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர பிரதமர் மோடி குதிரை பேரத்தினை ஊக்குவிக்கிறார் என சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். #PMModi

Update: 2018-05-16 11:28 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 12ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் மொத்தமுள்ள 224 அவை உறுப்பினர்களில் பாரதீய ஜனதா கட்சி 104 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.  ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 112 உறுப்பினர்களுக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சிக்கு பற்றாக்குறையாக உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி குதிரை பேரத்தினை ஊக்குவிக்கிறார் என சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்பொழுது, ஆளுநர் வஜுபாய் வாலா, ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.  ஏனெனில் எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி முடிவில் உள்ளனர் என்ற செய்திகளை மறுத்துள்ள சித்தராமையா நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.

மேலும் செய்திகள்