போராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமையும் கிடையாது, அவர்களது பணியும் கிடையாது கபில் சிபல் காட்டம்

போராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமை கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது என கபில் சிபல் காட்டமாக கூறிஉள்ளார். #KapilSibal #SterliteProtest

Update: 2018-05-24 11:28 GMT

புதுடெல்லி,


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், மக்களுக்கு போராட்டம் நடத்த அடிப்படை உரிமை உள்ளது. போலீசுக்கு அவர்களை கொல்லும் உரிமையும் கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது. ஆனால் தூத்துக்குடியில் அரசாங்கம் அதனை செய்து உள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள். அரசு எப்போது எல்லாம் மக்களை அமைதியாக்குகிறதோ அப்போது எல்லாம் நாம் அமைதியாக அதை பார்த்து வருகிறோம். இத்தேசம் மாறிவிட்டது என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்