பதவி ஏற்பு விழா: அவமானபடுத்தியதாக மம்தா பானர்ஜி கோபம் ; முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோரினார்

பதவி ஏற்பு விழா: நடக்கவைத்து அவமானபடுத்தியதாக மம்தா பானர்ஜி கோபம் முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோரினார். #MamataBanerjee

Update: 2018-05-24 12:25 GMT
பெங்களூரு

கர்நாடகாவில் ஜனதா தளம்(எஸ்)  தலைவர் குமாரசாமி நேற்று முதல் மந்திரியாக  ஏற்று   கொண்டார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன், ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு, புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம்(சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ், தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு வந்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை  பல கிலோமீட்டர் தூரம் நடக்கவைத்து அவமானப்படுத்தியதாக  கர்நாடக மாநில டிஜிபி மீது மம்தா கோபம் அடைந்தார்.

கர்நாடக மாநில முதல் பெண் டிஜிபியாக இருந்தவர் நீலமணி ராஜூ .பதவி ஏற்பு விழா நடைபெற்ற விதான சவுதாவுக்கு வரும் வழி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மம்தா பான்ர்ஜியால் வரமுடியவில்லை. இதனால் விதான்  சவுதாவை அடைய மம்தா ஒரு குறுகிய தூரத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, கர்நாடக  டிஜிபி நீலமணி ராஜூவிடம்  மம்தா புகார் அளித்தார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மிகுந்த அதிருப்தி தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
 
மம்தா நடந்து வருவது போன்ற வீடியோ வெளியாகி மிகுந்த விவாதத்திற்கு உள்ளானது. பதவியேற்பு விழாவில் அவர் நுழைந்த ஒரு வீடியோவில், கர்நாடகா டி.ஜி.பி.யிடம் தனது கண்டனத்தை தெரிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவார் ஆகியோருடன் அவரது நிலைப்பாட்டை விளக்கி உள்ளார்.

இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்காக மம்தா பானர்ஜியிடம் குமாரசாமி மன்னிப்பு கோரினார். இனிமேல் இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்வதாக அவர் உறுதியளித்தார். இந்த நிலையில் இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவை, மம்தா பானர்ஜி அவமானப்படுத்திவிட்டதாக பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக மாநில டிஜிபி நீலமணி ராஜூ இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார். என தகவல் வெளியாகி உள்ளது ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் செய்திகள்