மும்பைவாசிகளுக்கு இனிய செய்தி; 12 அங்குல ஆழ நீரிலும் இயங்கும் நவீன ரெயில் என்ஜின்

12 அங்குல ஆழ நீரிலும் இயங்கும் நவீன ரெயில் என்ஜினை மத்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.

Update: 2018-06-11 15:10 GMT

மும்பை,

மும்பையில் புறநகர் ரெயில்கள் பொதுமக்களின் அன்றாட பயணத்திற்க பெரிதும் உதவுகிறது.  மேற்கு ரெயில்வே மற்றும் மத்திய ரெயில்வே என இரு மண்டலங்களால் இயக்கப்படும் புறநகர் ரெயில்களில் நாளொன்றுக்கு 70 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பயணம் செய்கின்றனர்.

கடந்த சில வருடங்களில் மழை காலங்களின்போது தண்டவாளங்களில் மழைநீர் சேர்ந்து விடுவது உண்டு.  4 அங்குல அளவிற்கு நீர் தேங்கினால் அது ரெயில் என்ஜின் இயங்குவதில் தடையை ஏற்படுத்தும்.  மழைநீர் முழுவதும் வடியும் வரை ரெயில்களால் செல்ல இயலாது.

கடந்த வருடம் செப்டம்பரில் கனமழையால் ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி ரெயில் சேவையில் பாதிப்பினை ஏற்படுத்தியது.  5 நாட்கள் கழிந்த பின்னரே பழைய நிலைக்கு ரெயில் சேவை திரும்பியது.  இதனால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், 12 அங்குல ஆழ நீரிலும் இயங்கும் நவீன ரெயில் என்ஜினை மத்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.  இந்த ரெயில் என்ஜின் வெள்ளநீர் நிறைந்த தண்டவாளங்களிலும் புறநகர் மற்றும் தொலைதூர ரெயில்களை இழுத்து செல்லும் திறன் பெற்றது.  இதனால் மழை காலங்களில் மும்பைவாசிகள் ரெயில் பயணம் செய்வதற்கு சிரமம் இருக்காது.

மேலும் செய்திகள்