ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #AircelMaxisCase

Update: 2018-06-13 09:43 GMT

புதுடெல்லி,


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் தீவிரமாக விசாரித்து வருகிறது. இப்போது கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது இன்று அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உள்ளது.

மேலும் செய்திகள்