வரிசையில் நின்று இளம்பெண்ணை கட்டி பிடித்த இளைஞர்களுக்கு இமாம் கண்டனம்

ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலர் வரிசையில் நின்று இளம்பெண்ணை கட்டி பிடித்தது இஸ்லாமிற்கு எதிரானது என்று இமாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-23 07:48 GMT

மொராதாபாத்,

உத்தர பிரதேசத்தில் மொராதாபாத் நகரில் வணிக வளாகம் ஒன்றின் வெளியே ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.  இதில் இளம்பெண் ஒருவர் இளைஞர்கள் சிலரை கட்டி பிடித்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு உள்ளார்.  இதற்காக ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வரிசையில் நின்றுள்ளனர்.

முஸ்லிம் சமூக மரபுகளின்படி பண்டிகை காலங்களிலோ அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ பெண்கள் மற்றும் சிறுமிகள் அடையாளம் தெரியாத ஆடவர்களை கட்டி பிடிப்பதோ அல்லது உடல் ரீதியாக தொடுவதற்கோ அனுமதி இல்லை.

இந்த நிலையில், யூ டியூபில் இளம்பெண் பதிவேற்றம் செய்த வீடியோவிற்கு எதிர்ப்புகள் கிளம்பின.  இதனை தொடர்ந்து தனது செயலுக்கு இளம்பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுபற்றி மாவட்ட இமாம் முகமது அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இளம்பெண்ணிடம் நான் பேசினேன்.  அறியாமையால் அவர் இதுபோன்று செய்துள்ளார்.  இளைஞர்களை கட்டி பிடிப்பது இஸ்லாமிற்கு விரோதம் நிறைந்தது மற்றும் ஷரியத்திற்கு எதிரானது என எடுத்து கூறி புரிய வைத்தேன்.  இஸ்லாமிற்கு விரோத செயலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இதே சட்டம் பொருந்தும் என கூறியுள்ளார்.

அந்த சிறுமி எனது மகள் போன்றவர்.  திருமணம் செய்ய முடியாத பிரிவில் வரும் தகப்பனார் மற்றும் சகோதரர் தவிர்த்து பிற அந்நிய ஆடவர்களை கட்டி பிடிக்க கூடாது என எடுத்து கூறினேன்.  அந்த இளைஞர்களும் வருத்தம் தெரிவிப்பதுடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்