சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்: பீகார் பெண் மந்திரி ராஜினாமா

சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பீகார் பெண் மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2018-08-08 23:29 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், மாநிலத்தில் சமூக நலத்துறை பொறுப்பை கவனித்து வந்த பெண் மந்திரி மஞ்சு வர்மாவின் கணவரும் சம்பந்தப்பட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தன.

இந்த நிலையில் மஞ்சு வர்மா நேற்று தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்