துணை முதல்வரின் ஆடை மற்றும் ஷூவை சுத்தம் செய்த பாதுகாவலர்

கர்நாடக துணை முதல்வரின் ஆடை மற்றும் ஷூவை பாதுகாவலர் சுத்தம் செய்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-09-05 06:03 GMT
பெங்களூர்

கர்நாடக துணை முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஷ்வராவின்  வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. பெங்களூரு மேம்பாட்டு அமைச்சராக இருந்த பரமேஸ்வரா, திங்களிலிருந்து நகரத்தில் நகர்ப்புற பணிக்கான ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது உல்சோர் ஏரிக்கு சென்றபோது  அமைச்சரின் உடைகள் மற்றும் ஷூவில் சிறிது அழுக்கு ஏற்பட்டது.  உடனே பரமேஷ்வராவின்  பாதுகாவலர்  பாட்டில் தண்ணீர் மற்றும்  கைகுட்டையால் அமைச்சரின்  ஷூ - ஆடையை சுத்தம் செய்து உள்ளார்.  இந்த செயலை அவர் தடுத்து நிறுத்துவதற்கும் முயற்சி செய்யவில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பரமேஸ்வரா பாதுகாவலர்  எனக்கு உதவ வந்தார் மற்றும் அது விரைவில் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்த சிறு சம்பவத்தை சர்வதேச விவகாரமாக செய்துவிட்டீர்கள்.   நான் இதற்காக நன்றி செலுத்துகிறேன் என கூறி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பதில் அளித்த பா.ஜ.க. தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, 

"இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஒரு பொது நபரின் நடத்தை இது மாதிரி தேவையற்றது. இதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறினார்.


மேலும் செய்திகள்