பணமதிப்பிழப்பு மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் மோடி அரசு மீது மன்மோகன் சிங் கடும் தாக்கு

பணமதிப்பிழப்பு மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் மோடி அரசை மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2018-09-07 15:27 GMT

புதுடெல்லி,

மேக் இன் இந்தியா மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா (எழுந்திரு இந்தியா) போன்ற திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

 எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களில் இருந்து இன்னும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மைகளை பெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதியை எதிர்பார்த்து இளைஞர்கள் மிகவும் வேதனையுடன் காத்திருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவிதம் குறைந்துவிட்டது. அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மோடி அரசு வெளியிட்டுள்ள தகவலால் மக்கள் ஈர்க்கப்படவில்லை என மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்