தேசிய செய்திகள்
தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,


தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த பின்னர் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில் நவம்பர் மாதம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சந்திரசேகர் ராவ் மற்றும் மாநில அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி பேசியதாக வெளியாகிய தகவலை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் மறுத்துள்ளார். தெலுங்கானாவிற்கு தேர்தல் ஆணைய குழு 11-ம் தேதி செல்கிறது, அப்போது அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். 
 
 தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆராய்வதற்காக, தேர்தல் கமி‌ஷன் ஒரு குழுவை 11–ந் தேதி ஐதராபாத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கிறது.

மூத்த துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா தலைமையில் அக்குழு செல்கிறது. தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்த பிறகு தேர்தல் கமி‌ஷனிடம் அக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.