தேசிய செய்திகள்
தெலுங்கானாஅரசு பஸ் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

தெலுங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது.
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாநிலம் கொண்டாகட்டு  மலைபாதையில் இன்று 50க்கும்  மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெலீயானது.  20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்தில் கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தெலங்கானாவின் கொண்டாகட்டு மலைச்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்து உள்ளது.
பலியானவர்களில் 25 பெண்கள், 8 குழந்தைகள் எனதகவல் வெளியாகி உள்ளது.