பேஸ்புக் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம்

பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-09-24 23:40 GMT
பெங்களூரு,

பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயலாளராக இருந்து வருகிறார்.

பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த உமாங் பேடி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அவரின் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவராக இருந்த அஜித் மோகன், பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும், துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் செயல்பட துவங்குவார்.

‘அஜித் மோகனின் அனுபவம், இந்தியா முழுவதும் உள்ள சமூகங்கள், அமைப்புகள், நிறுவனங்களிடம் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவும், இந்தியாவில் தொடர்ச்சியான முதலீட்டை வாங்கும் பொறுப்பிற்காக இந்தியாவில் மூத்த தலைமை குழுவை மோகன் வழிநடத்துவார். மக்கள், தொழில்கள் மற்றும் அரசாங்கத்துடன் சுமுகமாக செயல்பட்டு பேஸ்புக்கின் உறவுகளை வலுப்படுத்துவார். இந்திய மக்களுக்கு மிகுந்த அக்கறையுடனும், எளிதில் தொடர்பு கொள்ள உதவுவதற்கும், நிறுவனத்தின் முயற்சிகள் மேம்படுத்தப்படும்’ என்று அஜித் மோகன் நியமனம் குறித்து பேஸ்புக் கருத்து தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்