துப்பாக்கியை காட்டி மிரட்டிய அரசியல் பிரமுகர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் மகன் ஆஷிஸ் பாண்டேவுக்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.

Update: 2018-10-23 11:49 GMT
புதுடெல்லி,

டெல்லி ஆர்கே புரத்தில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஒருவருடன் துப்பாக்கியுடன் வாக்குவாதம் செய்யும் காட்சி அண்மையில் சமூக  வலைத்தளங்களில் வைரலானது. விசாரணையில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பியுமான ராகேஷ் என்பவரது மகன் ஆஷிஸ் பாண்டே என்பது தெரியவந்தது. 

இவரது  சகோதரர் ரித்தேஷ் பாண்டே, தற்போது உபியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக உள்ளார். நட்சத்திர ஓட்டலில், கழிவறையை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த ஆஷிஸ் பாண்டே பிறகு சரண் அடைந்தார். தற்போது, சிறையில் உள்ள அவரது ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆஷிஸ் பாண்டேவின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்