கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது

கட்டுப்பாட்டை டெல்லி மக்கள் நேற்று இரவு நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததால், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது.

Update: 2018-11-08 01:53 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லி, கடுமையான காற்று மாசால் அவதிப்பட்டு வருகிறது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு  இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை மக்கள் மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மீறி மக்கள் பட்டாசு வெடித்தால், காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால், நேற்று உச்ச நீதிமன்ற தடையை மீறியும் டெல்லியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து தள்ளப்பட்டன. இதனால், காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியது. 

இரவு 7 மணி முதல் காற்று மாசின் அளவு மிகவும் மோசமாக சென்றது. 7 மணியளவில் காற்று மாசின் அளவு 281 என்ற அளவில் இருந்தது. 11 மணியளவில் 302 ஆக அதிகரித்தது. இதனால், இரவு எங்கு பார்த்தாலும் புகை படலமாக காட்சி அளித்தது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.  டெல்லியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட போலீசார், உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்