குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-29 10:31 GMT

அகமதாபாத்,

குஜராத்தில் அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோருடன் இணைந்து அரபிக் கடலில் இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில், 173 கிலோ போதைப் பொருள்கள் இருந்தது. போதைப்பொருட்களைக்கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் ஏற்கனவே 86 கிலோ போதைப்பொருள் பிடிபட்ட நிலையில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்