பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டுகள் நிறைவடைந்தது : நாட்டின் கறுப்பு நாள் காங்கிரஸ் விமர்சனம்

பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டின் கறுப்பு நாள் என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

Update: 2018-11-08 06:31 GMT
புதுடெல்லி,

 2016 - இதே நாளில்தான்  பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்

இந்த அறிவிப்பு வெளியானதுமே ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போய் விட்டது. 

ஏடிஎம் வரிசையில் சோறு தண்ணி இல்லாமல் காத்து நின்ற நூற்றுக்கணக்கானோரை உயிரிழக்கச் செய்தது.  காங்கிரஸ் உள்பட  அனைத்து கட்சிகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏடிஎம் மிஷன்களை ரெடி பண்ண 35000 கோடியும், நாட்டின் பொருளாதார இழப்பு 1,50,000 கோடி என கணக்கு கூறப்பட்டு உள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின்  ஒரு "கறுப்பு நாள்" என்று விமர்சித்தது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே போன்ற உணர்வை டுவிட்டரில் பிரதிபலித்தார்.
பணமதிப்பிழப்பு என்ற மிகப்பெரிய மோசடி மூலம் அரசு மக்களை ஏமாற்றி விட்டது. இது பொருளாதாரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாழாக்கி விட்டது. இதை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி, மோடி அரசாங்கத்தின் இந்த முடிவிற்குக் கண்டனம் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. சாதாரண குடிமக்களின் உயிர்களை அழிப்பதன் பின்னர் பிரதம மந்திரி இப்போது பேசுவதை நிறுத்தி விட்டார். வரலாறு இன்று ஒரு கருப்பு நாளாக நினைவில் வைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்