பெங்களூருவில் அறிவியல் கழக ஆய்வகத்தில் வெடிவிபத்து - ஆராய்ச்சியாளர் சாவு

பெங்களூருவில் அறிவியல் கழக ஆய்வகத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில், ஆராய்ச்சியாளர் ஒருவர் பலியானார்.

Update: 2018-12-05 19:08 GMT
பெங்களூரு,

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இந்திய அறிவியல் கழக ஆய்வகத்தில் நேற்று 4 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மதியம் திடீரென்று ஆய்வகத்தில் ஏதோ வெடித்தது போன்று சத்தம் கேட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு ஆராய்ச்சியாளர் மனோஜ் (வயது 30) என்பவர் படுகாயம் அடைந்து இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆய்வகத்தில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் போன்ற கியாஸ் சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்