அரியானா: முன்னாள் முதல்-மந்திரியின் மகன் புதிய கட்சி தொடங்கினார்

அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரியின் மகன் அஜய் சவுதலா புதிய கட்சியை தொடங்கினார்.

Update: 2018-12-09 18:25 GMT
ஜிந்த்,

அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன்களான அஜய் மற்றும் அபய்க்கு இடையே அதிகார போட்டி நிலவியதை தொடர்ந்து, அஜய் சவுதாலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் கட்சியை இளைய மகன் அபயிடம் ஒப்படைத்தார், ஓம் பிரகாஷ் சவுதாலா. இதனால் கட்சி இரண்டாக உடைந்தது.

இதைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த அஜய் சவுதாலா, ‘ஜன்னாயக் ஜனதா கட்சி’ என்ற பெயரில் இன்று புதிய கட்சியை தொடங்கினார். ஜிந்த் நகரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவியும், எம்.எல்.ஏ.வுமான நைனா சவுதாலா, மகன்கள் துஷ்யந்த் சவுதாலா எம்.பி., திக்விஜய் சவுதாலா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அஜய் சவுதாலா புதிய கட்சி தொடங்கியதை தொடர்ந்து, மாநில எதிர்க்கட்சி தலைவரும், இந்திய தேசிய லோக்தள கட்சி தலைவருமான அபய் சவுதாலா, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.


மேலும் செய்திகள்