ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் -தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.

Update: 2018-12-10 10:44 GMT
புதுடெல்லி 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு  விசாரணை நிறைவுபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்து உள்ளது.

வழக்கு பற்றி   வைகோ கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல்நலன், சுகாதாரம், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது. தாஜ்மஹாலுக்காக சில ஆலைகளை மூடியதுபோல் மக்கள் உயிருக்காக ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது. அதிமுக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

முன்னாள் நீதிபதி  குரியன் ஜோசப் கூறியது போல்  ஸ்டெர்லைட் விவகாரத்திலும்  நீதிமன்றம் வெளியில் இருந்து இயக்கப்படுகிறது என வைகோ கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்