கேரளா: சபரிமலை விவகாரத்தில் சட்டசபை மீண்டும் முடக்கம்

சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டசபை மீண்டும் முடங்கியது.

Update: 2018-12-10 17:51 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சட்டசபை முன் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் சபரிமலை விவகாரத்தை முன்வைத்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இது இன்றும் தொடர்ந்தது. காலையில் சட்டசபை தொடங்கியதும், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வரும் தர்ணாவில் தலையிட்டு தீர்வு காணுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, எதிர்க்கட்சியினர் அனைவரும் அவையின் நடுப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதுடன், சபாநாயகரால் சபையை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும் செய்திகள்