சட்டசபை தேர்தலில் வெற்றி: 5 எம்.பி.க்கள் ராஜினாமா

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான மனோகர் உந்த்வால் மற்றும் நரேந்திர சிங் ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

Update: 2018-12-27 22:30 GMT

புதுடெல்லி,

சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மக்களவை உறுப்பினர்களான தம்ராத்வாஜ், ராகுல்சர்மா மற்றும் ஹரீஸ் சந்திரமீனா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

மேலும் செய்திகள்