பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் - கனிமொழி

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

Update: 2019-01-04 11:03 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி, கடந்த 9 ஆண்டுகளாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது என்று கூறினார். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் முடிவுக்கு கட்டுப்பட்டே இருக்கும் நிலை நீடிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டம் இயற்றப்படும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் கூட பெண்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர் என்றும் கனிமொழி தெரிவித்தார். சபரி மலை உள்பட பல இடங்களில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதை பார்க்க முடிகிறது. 

இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்துவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்