8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-10 05:12 GMT
புதுடெல்லி, 

நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அண்மையில் தகவல் பரவியது. இந்த நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இது குறித்து கூறியிருப்பதாவது:- “ 8 ஆம்  வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாக கூறுவது தவறு.

இந்தி உள்பட எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று புதிய வரைவுக்கொள்கையில் இல்லை. தவறான, விஷமத்தனமான கருத்துக்கள் சில ஊடகங்களில் பரவுவதால் இந்த விளக்கம் அவசியமாகிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதிய கல்விக்கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் கமிட்டி, நாடு முழுவதும் இந்தி கட்டாயம் என தனது வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்