வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? - அமித்ஷா எச்சரிக்கை

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.

Update: 2019-01-12 09:13 GMT
புதுடெல்லி

பாரதீய  ஜனதா கட்சியின்  தேசிய மாநாடு  டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  

அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

வரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்.

1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது.  2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்