பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இன்றிலிருந்து அமலாகிறது.மத்திய அரசு மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

Update: 2019-01-14 12:33 GMT
புதுடெல்லி

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இன்று முதல் அமலாகிறது.  மத்திய அரசு மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.  

இந்நிலையில் உயர்கல்வியிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் பத்து விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தங்கள் மாநிலத்தில் இன்றுமுதல் நடைமுறைப்படுத்துவதாக குஜராத் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

ஏற்கெனவே அறிவித்து இன்னும் நடைமுறைகள் தொடங்காத வேலைவாய்ப்புக்கும், இன்றிலிருந்து அறிவிக்கப்படும் வேலைவாய்ப்புக்கும் இது பொருந்தும்.

குஜராத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 7விழுக்காடும், பழங்குடியினருக்கு 15விழுக்காடும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27விழுக்காடும் ஏற்கெனவே இடஒதுக்கீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்