16 மாத யோகி ஆதித்யநாத் அரசில் 3000 என்கவுண்டர்கள், 78 பேர் கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சியமைந்த 16 மாதங்களில் 3000 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. அதில் 70 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-01-25 11:57 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொல்லுவதாக கூறப்படுகிறது.  போலீசாருக்கும், ரவுடி கும்பலுக்கும் இடையே நடைபெற்ற சண்டையை ஊடகங்கள் நேரலையாகவும் வெளியிட்டது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சியமைந்த 16 மாதங்களில் 3000 என்கவுண்டர்கள் நடந்துள்ளது, அதில் 70 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு நாளை குடியரசு தினவிழாவில் அரசின் சாதனையாக தெரிவிக்கப்படுகிறது.

என்கவுண்டர்களில் கிரிமினல்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் அரசின் சாதனையாக குடியரசு தினவிழா அறிவிப்பில் வெளியிடப்பட உள்ளது.

மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 6 என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. அதில் 14 கிரிமினல்கள் கைது செய்யப்படுகிறார்கள் என தரவுகள் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்