ராகுல் காந்தி ராவணன், பிரியங்கா- சூர்ப்பணகை - பாஜக எம்.எல்.ஏ விமர்சனம்

ராகுலை ராவணணுடனும், பிரியங்காவை சூர்ப்பணகையுடனும் ஒப்பிட்டு உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

Update: 2019-01-30 07:35 GMT
லக்னோ

உத்தரபிரதேச மாநிலம், பல்லியா தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ சுரேந்திரா சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும்  பிரியங்கா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி ராவணன் என்றும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி சூர்ப்பணகை என்றும், ராவணனை வீழ்த்தும் ராமனாக பிரதமர் மோடி உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில பா.ஜ.க. அமோக வெற்றிபெறும் என தெரிவித்த சுரேந்திரா சிங், காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் என விமர்சித்துள்ளார். சுரேந்திரா சிங் அடிக்கடி  சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்