ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; துபாய் தொழிலதிபருக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் துபாய் தொழிலதிபருக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Update: 2019-01-31 12:59 GMT
புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த துபாயை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் ஷம்ஷேர் பகதூர் சக்சேனா நேற்று மாலை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.  அவரை டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.  அவரை காவலில் விசாரிக்க 8 நாட்கள் அனுமதி கோரினர்.  ஆனால் நீதிபதிகள் 4 நாட்கள் அனுமதி அளித்தனர்.

இதேபோன்று இந்த வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபரான தீபக் தல்வார் சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். மேன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.  இவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்