குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு -ரிசர்வ் வங்கி

வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார்.

Update: 2019-02-07 07:05 GMT
புதுடெல்லி

 ரிசர்வ் வங்கி கவர்னர்  சக்தி காந்ததாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2019-2020 மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாகும். பணவீக்க விகிதம் 2019-2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 3.2-3.4% ஆக மதிப்பிடப்படுகிறது. 2019-2020 மூன்றாவது காலாண்டில் 3.9 சதவீதம் என மதிப்பிடப்பட்டு உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்