கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கள்ளச்சாரயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2019-02-11 03:16 GMT
லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 116 ஐ தொட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

இச்சம்பவத்திற்கு உத்தர பிரதேசம் மற்றும் உத்திரகாண்டில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தான் காரணம் என சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஆனால் சமாஜ்வாடிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இவ்விவகாரத்தில் அரசியல் சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் செய்திகள்